GALLERY
கண்களாலேயே வித்தை காட்டும் கண்ணம்மாவின் ஹாட் புகைப்படங்கள்…
கண்ணம்மா தனது கண்களாலேயே வித்தை காட்டும் ஹாட் புகைப்படங்களை பார்க்கலாம்
“பாரதி கண்ணம்மா” புகழ் ரோஷினி ஹரிப்பிரியன் சமீப காலமாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காந்த கண்களால் சொக்கி இழுக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கண்ணை பறிக்கும் விதமாக கண்களாலேயே வித்தை காட்டும் பல புகைப்படங்களை ரோஷினி இறக்கி உள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” தொடர் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் ரோஷினி. “பாரதி கண்ணம்மா” தொடரில் இரு குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும், அதே நேரத்தில் தன் மானத்துக்கு பங்கம் விளைந்த போது சீறும் பெண் சிங்கம் போன்ற கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திருந்தார்.
“பாரதி கண்ணம்மா” தொடரில் எப்போதும் ஹோம்லி லுக்கில் பார்த்து பழகிப்போன நமக்கு அவரது சமூக வலைத்தளப் பக்கம் பெரிதும் ஆச்சரியத்தை கொடுத்தது. நமது கண்ணம்மாவா இது என வாயில் கை வைக்கும் அளவுக்கு மாடல் புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டு வந்தார். கண்ணம்மாவின் இந்த இரு பக்கங்களையும் ரசித்து கொண்டிருந்த வேளையில் திடீரென “பாரதி கண்ணம்மா” தொடரில் இருந்து விலகினார்.
இளைஞர்கள் ஸ்தம்பித்து போனார்கள். “பாரதி கண்ணம்மா” தொடரை ரோஷினிக்காகவே தினமும் பார்த்த இளைஞர்கள் பலர். அவர் திடீரென அத்தொடரில் இருந்து வெளிவந்தவுடன் இளைஞர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கினர்.
இதனை தொடர்ந்து திடீரென அதிர்ச்சியூட்டும் வகையில் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் புகுந்தார். கண்ணம்மா தொடரில் பார்த்த இவரை வேறு கோணத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் எதிர்பாராவிதமாக எலினிமேட் ஆனார்.