GALLERY
“கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளித் தெறிக்கும் ராஷ்மிகா”.. ஹாட் புகைப்படங்கள்..
ராஷ்மிகா மந்தனா கருப்பு ஆடையில் கவர்ச்சியை அள்ளித் தெறிக்கும் விதமாக் பல ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
2016-ல் வெளியான கன்னட திரைப்படமான “கிர்க் பார்ட்டி” மூலம் திரையுலகத்திற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின் சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக “அஞ்சனி புத்ரா” என்ற திரைப்படத்தில் நடித்தார்.
பின்பு தெலுங்கில் “சலோ” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த “கீதா கோவிந்தம்” திரைப்படத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். “இங்கிம் இங்கிம்” பாடலில் தனது மெல்லிடையை காட்டி இளைஞர்களை வலை போட்டு தம் பக்கம் இழுத்தார். அதன் பிறகு ராஷ்மிகாவுக்கு ஏறுமுகம் தான்.
தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் “டியர் காம்ரெட்”. பின் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் “சரலேரு நீக்கெவரு” திரைப்படத்தில் க்யூட்டாக வந்து நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார். பின்பு தெலுங்கில் “பீஷ்மா” கன்னடத்தில் “பொகாரு” போன்ற படங்களில் நடித்தார்.
அதன் பின்பு கார்த்தி நடித்த “சுல்தான்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என சக்கை போடு போட்ட அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் “சாமி” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் என பலரும் அவரின் நடனத்தை ஆடி டிரெண்ட் செய்தார்கள்.
சமீபத்தில் தெலுங்கில் “ஆடவல்லு மீக்கு ஜோகர்லு” திரைப்படத்தில் அழகு பதுமையாக வலம் வந்தார். தற்போது “விஜய் 66”-ல் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இவ்வாறு சினிமாவில் பிசியான நாயகியாக திரியும் ராஷ்மிகா, பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி தெறிக்கவிடும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.