GALLERY
படுக்கையறையில் ஓவியா… ? என்ன இப்படி இருக்குறாங்க?
நடிகை ஓவியாவின் படுக்கையறை புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
நடிகை ஓவியா மலையாளத்தில் “கங்காரு” என்ற திரைப்படம் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்த ஓவியா, தமிழில் விமலுக்கு ஜோடியாக நடித்த “களவாணி” என்ற திரைப்படத்தின் மூலம் தான் பரவலாக அறியப்பட்டார். அத்திரைப்படத்திலேயே இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார்.
அதன் பின் ஓவியாவின் மார்க்கெட் வேற லெவலில் எகிறியது. “களவாணி”யை தொடர்ந்து “மன்மதன் அம்பு” திரைப்படத்தில் நடித்தார். அதில் சிறு வேடம் தான் என்றாலும் தன்னுடைய அசரவைக்கும் பார்வையாளேயே ஆடியன்ஸை கவுத்தார்.
அதன் பின் கன்னடம், தமிழ், மலையாளம் என ஒரு ரவுண்டு வந்த ஓவியாவிற்கு “கலகலப்பு” திரைப்படம் பல நாள் கழித்து ஒரு பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் சில ஹவுஸ் மெட்களுக்கும் ஓவியாவுக்கும் பல வாக்கு வாதங்கள் எழுந்தன. ஆனால் ஓவியா அதனை தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் எதிர்கொண்டார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஷோஷியல் மீடியாவில் ஓவியாவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. “ஓவியா ஆர்மி” என்று பெயர் சூட்டும் அளவிற்கு ரசிகர்களை பிக் பாஸ் மூலம் கவர்ந்தார்.
பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின் “90ML”, “முனி 4”, “களவாணி 2” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் சூடேத்தும் பல புகைப்படங்களை ஓவியா பகிர்ந்து வருகிறார். அதிலும் படுக்கையறையில் இருந்தவாறு சில புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.