GALLERY
பிரேமம் கதாநாயகியின் டாப் கிளாமர் புகைப்படங்கள்..
“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் நமது உள்ளங்களை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியனின் ஹாட் வைரல் புகைப்படங்கள் இதோ..
நடிகை மடோன்னா செபஸ்டியன் “பிரேமம்” திரைப்படத்தில் செலின் என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார். செலின் என்றாலே மடோன்னா செபஸ்டியனும் ரெட் வெல்வெட் கேக்கும் தான் பலருக்கும் நியாபகம் வரும்.
“பிரேமம்” திரைப்படத்தில் நிவின் பாலி நடத்தும் கேக் ஷாப்பிற்கு வரும் போது தான் முதன் முதலில் அப்படத்திலேயே தோன்றுவார். அதற்கு முன் சிறு குழந்தையாக அனுபமாவிற்கு தங்கையாக வந்திருப்பார்.
கேக் ஷாப்பிற்கு வந்து மடோன்னா கேக் கேட்கும் அழகே தனியாக இருக்கும். கொஞ்சும் மலையாளத்தில் குழைந்து குழைந்து பேசுவார். அதன் பின் நிவின் பாலி பேக்கரியில் வெல்வட் கேக் சாப்பிடும் போது இளைஞர்களை சொக்க வைத்து கண் கொட்டாமல் பார்க்க வைத்திருப்பார்.
“பிரேமம்” திரைப்படத்தில் அவரின் ஒவ்வொரு ரியாக்சனுமே க்யூட்டாக இருக்கும். அதே போல் அவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “காதலும் கடந்து போகும்” திரைப்படத்தில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். அதில் மடோன்னா க்யூட்னஸோடு தன் இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார்.
அதன் பின் மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். குறிப்பாக தமிழில் “காதலும் கடந்து போகும்” திரைப்படத்திற்கு பின் அவர் “கவண்”, “பவர் பாண்டி”,”ஜுங்கா”, “வானம் கொட்டட்டும்”, “கொம்பு வச்ச சிங்கம்டா” போன்ற படங்களில் நடித்தார்.
மடோன்னா நடிகை மட்டும் அல்லாது சிறந்த பாடகரும் கூட. மலையாளத்தில் வெளிவந்த “வல்லீம் தெட்டி புல்லீம் தெட்டி” என்ற திரைப்படத்தில் “புலர்காலம் போலே” என்ற அருமையான பாடலை பாடி இருப்பார். அதே போல் தமிழில் “கவண்” திரைப்படத்தில் “ஹேப்பி நியூ இயர்” என்ற பாடலை பாடியிருப்பார்.
இவ்வாறு படு பிசியாக இருக்கும் மடோன்னா, தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி பொங்கும் புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.