GALLERY
வெங்கட் பிரபு பட நடிகையின் டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்க..
வெங்கட் பிரபு இயக்கிய “மன்மத லீலை” திரைப்படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட டாப் கிளாமரில் கிரங்கடிக்கும் புகைப்படங்களை பாருங்கள்.
கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னடத்தில் “கிரிக் பார்ட்டி”, காலேஜ் குமார்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் “வாட்ச் மேன்”, “கோமாளி”, “பப்பி”, “தேள்”, “மன்மத லீலை” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களை விட சமூக வலைத்தளத்தில் தான் கிரங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனலை கிளப்புவார்.
கன்னடத்து பைங்கிளியான சம்யுக்தா, தென்னிந்திய அழகியாக திகழ்பவர். இவர் நடித்த திரைப்படங்களில் கியூட் கேர்ளாக வந்து பலரையும் கவ்விக்கொண்டு போனார்.
சமீபத்தில் வெளிவந்த “மன்மத லீலை” திரைப்படத்தில் கூட செமத்தியாக வந்து பார்வையாளர்களை கட்டி இழுத்தார். இவரின் இன்ஸ்டா பக்கம் எப்போதும் அனலாகவே இருக்கும். அந்தளவுக்கு கண் கொள்ளா புகைப்படங்களை சமீபத்தில் இறக்கி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கூட “கிரீம்” என்ற கன்னட திரைப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே நடித்து வந்தபோது சண்டை காட்சியில் கடினமாக சண்டையிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது சம்யுக்தா ஹெக்டே தனது காலை மேலே தூக்கி ஒருவரை எத்த போக அப்படியே காலை பிடித்துக் கொண்டு வலியில் கதறியபடி கீழே விழுந்தார்.
இதனை கண்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து அவரை அணுகினர். வலியால் துடித்துக் கொண்டிருந்த சம்யுக்தா ஹெக்டேவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த செய்தியால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். தற்போது சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் உள்ளார். ஆதலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவர் வெளியிட்ட கிரங்கடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.