Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சூர்யா பட நாயகியின் டாப் கியர் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..

GALLERY

சூர்யா பட நாயகியின் டாப் கியர் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..

நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட டாப் கியர் போட்டு தூக்கும் கிளாமர் புகைப்படங்களை பாருங்கள்

நடிகை ரகுல் பிரீத் சிங் கன்னடத்தில் வெளிவந்த “கில்லி” என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தமிழில் செல்வராகவன் இயக்கி வெளிவந்த “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

அதன் பின் தெலுங்கு திரை உலகில் “கெராட்டம்” என்ற திரைப்படம் மூலம் நுழைந்தார். அதன் பின் தமிழில் அருண் விஜய் நடித்த “தடையறத் தாக்க” என்ற திரைப்படத்தின் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமானார்.

மேலும் தமிழில் “புத்தகம்”, “என்னமோ ஏதோ”, “தீரன் அதிகாரம் ஒன்று”, “தேவ்”, “என் ஜி கே’, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் “அயலான்” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டும் அல்லாது ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்ற ஆண்டு முதல் ஜாக்கி பக்னானி என்ற தயாரிப்பாளருடன் காதலில் இருக்கிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பல மொழி திரைப்படங்களில் பிசியாக அலையும் ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தளத்திலும் படு பிசியானவர். அவர் வெளியிடும் பல கண்கவர் புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து செல்பவை.

அவரின் வட்ட முகமும், சிரிப்பும் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது டாப் கியர் ஏத்தும் பல கிளாமர் புகைப்படங்களை ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading

More in GALLERY

To Top