GALLERY
தொடை அழகை காட்டி ஊரை மயக்கும் காலா பட நாயகி..
தொடை அழகை காட்டி ஊரை மயக்கும் விதமாக ஒரு ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார் காலா பட நாயகி ஹூமா குரேஷி.
பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் “கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்”, “பத்லாபூர்”, “வொயிட்” போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த “லைலா” என்ற வெப் சீரீஸ் பல சர்ச்சைகளையும் உண்டு செய்தது.
ஹூமா குரேஷி தமிழில் “காலா” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதில் காலாவின் முன்னாள் காதலியாக வந்து நமது மனதையும் கொள்ளைக் கொண்டார். அதன் பின் அஜித் நடித்த “வலிமை” திரைப்படத்திலும் நடித்தார். தனது 36 வயதிலும் தன்னுடைய கட்டழகு உடலை மெயின்டெயின் செய்யும் ஹூமா குரேஷி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு இலை போட்டு விருந்து வைப்பவர்.
இவரின் பல புகைப்படங்கள் எண்ணற்ற பார்வையார்களை கவர்ந்திழுத்து வருகிறது. வட இந்திய இளைஞர்களை ஏற்கனவே கைக்குள் போட்டு வைத்திருக்கும் ஹூமா குரேஷி இப்போது தமிழ் இளைஞர்களையும் கவர்ந்திழுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் “பசார்” என்ற பிரபல இதழுக்காக ஃபோட்டோஷுட் நடத்திய ஹூமா குரேஷி தனது தொடை அழகை காட்டி பலரையும் மயக்கும் விதமாக ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது.
ஹூமா குரேஷி நடிக்கும் திரைப்படங்களில் கூட அவர் கிளாமரை அவ்வளவாக வெளிகாட்டியது இல்லை. ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் அப்படி இல்லை. “இந்தா பாரு” என்பது போல் காட்டு காட்டு என காட்டுவார். இந்த நிலையில் தான் தற்போது தனது தொடை அழகை காட்டி மயக்க முடிவு செய்து இப்புகைப்படங்களை களம் இறக்கியுள்ளார் ஹூமா குரேஷி. அப்புகைப்படங்கள் இதோ..