CINEMA
மறுபடியும் ஒரு ரீமிக்ஸ் பாட்டா? யுவனுக்கு என்ன ஆச்சு? புலம்பும் நெட்டிசன்கள்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ஒரு ரீமிக்ஸ் பாடலை கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு இங்கு வேற லெவல் ரசிகர் கூட்டம் உண்டு. அவரது பாடல்களை உயிராக நினைப்பவர்கள் பலர். யுவனுக்காகவே திரையரங்கிற்கு சென்று அவர் இசையமைத்து படங்களை ரசித்து பார்ப்பவர்களும் பலர் உண்டு.
கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தானம் நடித்து வெளிவந்த “டிக்கிலோனா” திரைப்படத்தில் ஒரு ரீமிக்ஸ் சாங்கை யுவன் அப்படியே போட்டிருந்தார். கமல் ஹாசன் நடித்து 1990 ஆம் ஆண்டு வெளிவந்த “மைக்கில் மதன காம ராஜன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “வச்சாலும் வைக்காம போனாலும்” என்ற பாடலில் சின்ன இசைக் கோர்வைகளை மட்டும் கோர்த்து அப்பாடலை உருவாக்கி இருந்தார். அந்த பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்ட பாடலாகவும் திகழ்ந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரீமிக்ஸ் பாடலை அப்படியே கொடுத்துள்ளார் யுவன். அதுவும் அதே கமல் ஹாசன் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை.
“மைக்கில் மதன காம ராஜன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ரம் பம் பம்” என்ற பாடல் தற்போது ரீமிக்ஸாக சுந்தர். சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் “காஃபி வித் காதல்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் யுவன் ரசிகர்கள் “இப்போதும் ரீமிக்ஸ் பாடல் தானா?” என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். எனினும் பலர் இப்பாடலை ரசித்த வண்ணம் இருக்கின்றனர்.
“காஃபி வித் காதல்” திரைப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், ரைஸா, சம்யுக்தா, யோகி பாபு, கிங்க்ஸ்லீ, மாளவிகா ஷர்மா, ஐஸ்வர்யா தத்தா, DD ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளிவர உள்ளது.
