CINEMA
“ஒரிஜினல் சிங்கத்துடன் நடித்த யோகி பாபு”… Terrific தருணம்
உண்மையான சிங்கம், புலி ஆகியவை உடன் யோகி பாபு நடித்த புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது.
ஜீவா, மிர்ச்சி சிவா, யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோல் மால்”. இத்திரைப்படத்தை பொன் குமரன் இயக்கி உள்ளார்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. “கோல் மால்” திரைப்படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் பொன் குமரன் கூறியுள்ளார்.
அதாவது இத்திரைப்படத்தில் ஜீவா, சிவா உட்பட பலரும் ஒரு காட்டுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அக்காட்டுக்குள் சிங்கமும் புலியும் இவர்களுக்கு பெரிய சிக்கலை கொடுக்கிறது.
இக்காட்சி மொரிஷியஸில் படமாக்கப்பட்டுள்ளதாம். இதில் ஜீவா, மிர்ச்சி சிவா, யோகி பாபு ஆகிய பலரும் ஒரிஜினல் சிங்கத்துடனும் புலியுடனும் நடித்துள்ளனராம். இந்த காட்சிக்காக பல நாட்கள் சிங்கத்துடனும் புலியுடன் ஒத்திகை பார்க்கப்பட்டு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளனராம். மேலும் படப்பிடிப்பின் போது மிருகங்களை பழக்கப்படுத்தும் பயிற்சியாளர்களை துணைக்கு வைத்து கொண்டு தான் படப்பிடிப்பு தொடங்கினராம்.
நடிகர்கள் எவரும் டூப் போட்டு நடிக்கவில்லையாம். பொதுவாக இது போன்ற மிருகங்கள் இடம்பெரும் காட்சிக்கு கிராபிக்ஸ் தான் செய்வார்கள், ஆனால் லைவ் ஆக்டிங்கை விட கிராபிக்ஸில் அவ்வளவு நேர்த்தி வராது என முடிவெடுத்து இத்துணிகரமான காரியத்தில் இறங்கினராம். நடிகர்களும் துணிச்சலாக நடித்தனராம். இவ்வாறு இயக்குனர் பொன் குமரன் அந்த பேட்டியில் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
“கோல் மால்” திரைப்படத்தில் தமிழின் முன்னணி நடிகையான மாளவிகா come back தருகிறார். மேலும் கதாநாயகிகளாக பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் ஒரு ஜாலியான ஆடியன்ஸை கவரும் வகையில் Pure Entertainer ஆக இருக்கும் என இயக்குனர் பொன் குமரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
