GOSSIPS
“மஞ்சள் உடை” நடிகைக்கு இந்த ரெண்டு பேர் தான் ஹெல்ப் பண்றாங்க தெரியுமா?
மஞ்சள் உடையை பிரபலப்படுத்திய அந்த “மஞ்சள் உடை” நடிகையின் கேரியருக்கு அந்த ரெண்டு நடிகர்கள் தான் உதவுகிறார்களாம்.
சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரும் ஹிட் ஆன காதல் படத்தில் மஞ்சள் உடையில் நடித்து மஞ்சள் உடையை பிரபலமாக்கிய அந்த”மஞ்சள் உடை” நடிகை 90’s kids-களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தற்போது அவர் “இருட்டு” டைரக்டர் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அப்படம் இவ்வாண்டு வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில் “மஞ்சள் உடை”நடிகைக்கு வாய்ப்பே வருவதில்லையாம். அப்படி வந்தாலும் மிகவும் சுமாரான வாய்ய்புகளே வருகிறதாம். ஆனால் அதையும் தாண்டி சில படங்கள் அவருக்கு வருகிறதாம். அதற்கு காரணம் அந்த “வில் அம்பு” நடிகரும் “ஆடியோ லாஞ்ச்” நடிகரும் தானாம்.
டாப் மோஸ்ட் கதாநாயகர்களோடு நடித்தவருக்கு ஏன் இந்த நிலைமை என்று கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தால் ,அவருக்கு திமிர் தனம் ஜாஸ்தியாம். கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பந்தா காட்டுவாராம். ஆதலால் பல இயக்குனர்கள் அவரின் வீட்டுப்பக்கமே செல்வதில்லையாம்.
தற்போது அந்த “மஞ்சள் உடை” நடிகை, அந்த “இருட்டு” டைரக்டர் படத்திற்கு பின் பக்கத்து மாநிலத்தில் முன்னணி கதாநாயகருடன் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். அதை தாண்டி ஒரு வெப் சீரீஸ் தான் கைவசம் உள்ளதாம். அதை தவிர்த்து அவரது கையில் படங்களே இல்லையாம்.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் டாப் நடிகர்களுடன் நடித்த அந்த “மஞ்சள் உடை” நடிகையின் வாழ்க்கை அகங்காரத்தால் இப்படி மோசம் போய்விட்டதே என கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.