CINEMA
தோழியின் உதட்டில் முத்தம் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. நினைவு புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல்
யாஷிகா ஆனந்த் தனது தோழியின் உதட்டில் முத்தம் கொடுத்தவாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அவருடனான நினைவுகளை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் மாடலிங் உலகில் கனவு கன்னியாக வலம் வருபவர். “கவலை வேண்டாம்” “துருவங்கள் பதினாறு” போன்ற திரைப்படங்களில் யாஷிகா நடித்திருந்தாலும் “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” திரைப்படத்தின் மூலமாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 –ல் கன்டெஸ்டண்டாக கலந்து கொண்டார். அதன் பின் பிக் பாஸ் சீசன் 5-ல் நிரூப்பிற்கு ஆதரவாக உள்ளே வந்து சிறிது நேரம் நமது கண்களையும் கொள்ளை கொண்டார்.
இதைடையே சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பெரும் விபத்தில் சிக்கினார். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
ஆனால் துர்திஷ்டவசமாக அவரது தோழி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். யாஷிகாவும் காலில் பலத்த அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தார். பல நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு மீண்டார்.
யாஷிகாவுக்கு நடந்த விபத்து அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் சில நாட்களில் யாஷிகா குணமாகி மீண்டு வந்தது அவர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தற்போது தான் இழந்துவிட்ட தோழியை நினைவுப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “நாம் மீண்டும் சந்திக்கும் வரையில் நம்முடைய கதை முழுமையடையாது. மிஸ் யூ பூ. என்னுடைய பிரார்த்தனைகளிலும் நினைவுகளிலும் சிந்தனைகளிலும் என்றும் நீ இருப்பாய்” என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
