HOLLYWOOD
“டாக்டர் ஸ்ட்ரேஞ்சுல நடிச்சு விரக்தி ஆயிட்டேன்”…சூப்பர் ஹீரோயினுக்கு வந்த சோகத்தை பாருங்க..
மார்வெல் திரைப்படங்களில் “வாண்டா” கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் எலிசபெத் ஓல்சன், மார்வெல் திரைப்படங்களால் விரக்தி அடைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான மார்வெல் திரைப்படமான “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் சக்கை போடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் பல மில்லியன் டாலர்களை பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டி வருகிறது.
அத்திரைப்படத்தில் “வாண்டா’ என்கிற முக்கிய கதாப்பாத்திரம் ஒன்று உண்டு, இக்கதாப்பாத்திரம் ‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்” “அவஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்” போன்ற மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களில் இடம்பெரும். இக்கதாப்பாத்திரமும் கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் போல் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் தான்.
அப்படிப்பட்ட “வாண்டா” கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வருபவர் எலிசபெத் ஓல்சன். இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்த எலிசபெத் ஓல்சன் “மார்வெல் திரைப்படங்களால் நான் பல நல்ல திரைப்படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளேன். எனக்கு விரக்தி ஆக இருக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் எலிசபேத் அப்பேட்டியில் “ மார்வெல் திரைப்படங்கள் எனது கனவு திரைப்படங்களே அல்ல, அது என்னுடைய கனவை நோக்கிய முயற்சிகளில் இருந்து என்னை பிய்த்துக் கொண்டு போனது, மார்வெல் திரைப்படங்களால் நான் யோர்கோஸ் லேன்திமோஸின் “தி லாப்ஸ்டர்” திரைப்படத்தை இழந்தேன். ஒரு வேளை அந்த படத்தில் நான் நடித்திருந்தால் ஒரு ஹாலிவுட் நடிகையாக வேறு ஒரு வித்தியாசமான முயற்சிக்கு அது என்னை வழிவகுத்திருக்கும்” என கூறியுள்ளார்.
மார்வெல் கதாப்பத்திரமான “வாண்டா” ரசிகர்களை பெரிதும் ஈர்த்த கதாப்பாத்திரம். ஆனால் எலிசபெத் அக்கதாப்பத்திரத்தால் தான் விரக்தி அடைந்ததாக கூறியுள்ளது அவரது ரசிகர்களை வேதனைப் படுத்தியுள்ளது.
