Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வெந்து தணிந்தது காடு; ரிலீஸ் தேதிக்கு ஒரு வணக்கத்த போடு..

CINEMA

வெந்து தணிந்தது காடு; ரிலீஸ் தேதிக்கு ஒரு வணக்கத்த போடு..

“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வெளியீடு குறித்த புதிய அப்டேட் வீடியோ வெளிவந்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் எஸ். டி. ஆர். , ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜெயமோகன் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் glimpse சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சிம்பு மாறுபட்ட தோற்றத்துடன் கிராமத்தில் இருந்து கூலிக்காக மும்பைக்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியவருகிறது. படத்தின் “colour tone” புதிதாகவும் ஒரு வித அழகியல் நோக்குடன் துயரத்தையும் கலந்தது போல் இருக்கிறது.

படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Glimpse-ல் பின்னணியில் வரும் “மறக்குமா நெஞ்சம்” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக அப்பாடலில் வரும் கோரஸ் பகுதிகள் நமக்கு goosebumps ஏற்றுவது போல் இருந்தது.

அதன் பின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் “காலத்துக்கும் நீ வேணும்” பாடல் வெளியிடப்பட்டது. கேட்பதற்கு ரம்மியமாக அப்பாடல் இருந்தது.

இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் வெளியீடு குறித்தான ஒரு புதிய அப்டேட் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் பலரும் பதற்றத்தோடு இருக்க சிம்பு கையில் அடிபட்ட தோற்றத்தில் அமைதியாக தென்படுகிறார்.

இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவர உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

                   

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top