TELEVISION
கையில் குழந்தையுடன் VJ பிரியங்கா… வைரல் புகைப்படம்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கையில் குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு பிரியங்கா தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்போதும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை. தொகுப்பாளராக மட்டும் அல்லாமல் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதில் எல்லாருக்கும் கட்டிப் பிடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார். சக கன்டஸ்டுகளை அன்பினால் சொக்க வைத்தார். மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆனார்.
அவரும் ராஜூ ஜெயமோகனும் சேர்ந்தால் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. ராஜூவை அவர் “ஹே கோபால்” என கூறுவது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில் அபிஷேக்குடனும் நிரூப்புடனும் மிகவும் நெருக்கமாக பழகினார். அபிஷேக் வெளியேற்றப்பட்ட போது பெரிதும் கலங்கினார்.
அதே போல் வைல்ட் கார்டில் அபிஷேக் மீண்டும் உள்ளே வந்தபோது பிரியங்காவுக்கு குஷி தாங்க முடியவில்லை. மீண்டும் மூவரும் நண்பர்களாக இணைந்தனர். ஆனால் சில நாட்களிலேயே அபிஷேக் மீண்டும் வெளியேற்றப்பட்டார்.
அப்போது “மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை” என அழுது புலம்பி கொண்டிருந்தார். பிக் பாஸ் இறுதி வாரம் வரை சென்ற பிரியங்கா டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் இடத்திற்கு வந்தார். ராஜூ ஜெயமோகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இதனிடையே சில நாட்களுக்கு முன் பிரியங்கா தனது தம்பிக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் தான் அத்தையாகி உள்ளதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கையில் க்யூட்டாக ஒரு குழந்தையை ஏந்தியவாறு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram