TELEVISION
“உன்னை பாக்கத்தான் செல்லம் வந்தேன்..”.. மருமகளை தூக்கி கொஞ்சிய VJ பிரியங்கா..
VJ பிரியங்கா தனது மருமகளை தூக்கி கொஞ்சிய க்யூட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு பிரியங்கா தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்போதும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை. கடந்த பத்து வருடங்களாக மிகப்பிரபலமான தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் VJ பிரியங்கா.
சில மாதங்களுக்கு முன்பு “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில் எல்லாருக்கும் கட்டிப் பிடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார். சக கன்டஸ்டுகளை அன்பினால் சொக்க வைத்தார். மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆனார்.
இப்படி சின்ன விஷயத்திற்கே குதூகலமாகும் பிரியங்கா, தனக்கு மருமகள் பிறந்திருப்பதால் ஓவர் குதூகலத்தில் இருக்கிறார். சமீபத்தில் தனது குட்டி மருமகளை கையில் தூக்கி வைத்தவாறு ஒரு க்யூட் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் பிரியங்கா.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது குட்டி மருமகளுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. பார்க்கவே க்யூட் ஆக இருக்கும் அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
சமீபத்தில் கனடாவிற்கு சென்ற பிரியங்கா, தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக தெரிகிறது. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் “உனது அழகான முகத்தை பார்க்கவே நான் திரும்பி வந்தேன்” என தனது குட்டி மருமகளிடம் கூறுவது போல் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் நடு ரோட்டில் பிரியங்கா ஆடிய குத்தாட்ட வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து தற்போது பிரியங்கா தனது குட்டி மருமகளுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.