TELEVISION
VJ சித்ரா மரணத்தில் “அந்த” அரசியல்வாதிக்கும் தொடர்பா? வெளியான திடுக்கிடும் தகவல்
VJ சித்ரா மரணத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு தொடர்பு உள்ளதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த VJ சித்ரா, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து சித்ராவின் மரணம் குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கினர். இவ்வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேமந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளீவந்தார்.
ஜாமீனில் வெளிவந்த அவர், சித்ரா மரணத்தில் முன்னாள் அமைச்சருக்கும், முன்னாள் எம். எல். ஏ. ஒருவருக்கும், மாஃபியா கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என கூறி பீதியை கிளப்பினார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகையும் சித்ராவின் தோழியுமான ரேகா, திடீரென்று ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறினார். அதாவது சித்ரா அவ்வளவு நல்லவர் இல்லை எனவும், சித்ராவும் ஹேமந்த்தும் தங்கியிருந்த அறைக்கு தான் சென்ற போது நிறைய காண்டம் இருந்ததாகவும் கூறினார்.
இவ்வாறு சித்ராவை குறித்து பல பகீர் குற்றச்சாட்டுகள் தினம் தோறும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சித்ராவிற்கும் வெளிநாட்டில் விபச்சாரி அழகிகளுடன் ஆட்டம் போட்ட அரசியல்வாதிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் சமீபத்தில் ஹேம்நாத்ன் நெடுங்கால நண்பர் ஒருவர் “ஹேமந்த் நல்லவன் கிடையாது, அவனுக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் போடும் பழக்கம் இருந்தது. சித்ராவை அவன் தான் கொன்றிருக்ககூடும்” என கூறி பீதியை கிளப்பினார்.
இப்படி ஒவ்வொறு நாளும் சித்ரா மரணத்தின் குறித்து திருக்கிடும் தகவல் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், சித்ராவின் சாவுக்கு யார் காரணம் என உடனே கண்டுபிடிக்கமாறு காவல் துறைக்கு சித்ராவின் தோழி ரேகா கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
