CINEMA
விஷாலின் வெறித்தனமான Transformation பாருங்க… வைரல் புகைப்படம்
நடிகர் விஷாலின் வெறித்தனமான டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“செல்லமே” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான விஷால், தனது இரண்டாவது திரைப்படமான “சண்டக்கோழி” திரைப்படம் மூலம் ஆக்சன் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்தார். தனது இரண்டாவது திரைப்படத்திலேயே மாஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.
அதன் பின் விஷாலுக்கு அமைந்தது எல்லாமே மாஸ் ஹிட் படங்கள் தான். “திமிரு”, “சிவப்பதிகாரம்”, “தாமிரபரணி”, “மலைக்கோட்டை” என படு பயங்கரமான மாஸ் ஹிட்டால் தொடர்ந்து அதிரி புதிரியாக தமிழ் சினிமா உலகில் வலம் வந்தார்.
பாலா இயக்கத்தில் விஷால் நடித்த “அவன்-இவன்” திரைப்படத்தில் இவரின் நடிப்பின் மற்றொரு பரிணாமத்தை நாம் பார்த்திருப்போம். அதனை தொடர்ந்து “பாண்டிய நாடு”, “நான் சிகப்பு மனிதன்”, “பூஜை” என இவரது ஹிட் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது.
இதனிடையே விஷால் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் இடைத்தேர்தலில் போட்டியிட நாமினேஷன் செய்தார். ஆனால் அவரது நாமினேஷன் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
விஷால் சமீபத்தில் “ஆக்சன்”, “சக்ரா”, “எனிமி”, வீரமே வாகை சூடும்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “லத்தி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் “லத்தி” திரைப்படத்திற்காக ஜிம்மில் வெறித்தமாக வொர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுமரம் போல் மெயின்டெயின் செய்யும் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு Stunning புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஷால் தனது உடம்பில் வெறித்தனமான Transformation –ஐ காட்டியுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rise and grind 🏋🏻️. My early morning workout sessions at 5.30 am.
Gearing up for the last fight sequence schedule of #Laththi.#NoSubstituteForHardWork#StayHealthy #StayFit#NoPainNoGain pic.twitter.com/4AyCCiZ2VI— Vishal (@VishalKOfficial) July 2, 2022