CINEMA
ரோபோ ஷங்கர் கன்னத்தில் ஓங்கி அறைந்த விஷால்.. பதறி ஓடிய சூரி..
“லத்தி” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ரோபோ ஷங்கரின் கன்னத்தில் விஷால் ஓங்கி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷாலின் நடிப்பில் உருவான “லத்தி” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“லத்தி” திரைப்படத்தை ராணா புரொடக்சன்ஸ் சார்பாக நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்துள்ளனர். பாலசுப்ரமணியன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று “லத்தி” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சுனைனா, உதயநிதி ஸ்டாலின், ரோபோ ஷங்கர், சூரி ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய ரோபோ ஷங்கர் “விஷால் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கையில் என்னிடம் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்கவே மாட்டார்கள். என்னை சாலிகிராமத்தில் இருந்து தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்” என கூறினார்.
அப்போது அவரது அருகில் நின்றுக்கொண்டிருந்த விஷால் திடீரென ரோபோ ஷங்கரை அடித்தார். இதை பார்த்த பார்வையாளர்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்களுடன் மேடையில் நின்றுக்கொண்டிருந்த சூரி தலை தெறிக்க ஓடினார்.
சூரியை நிறுத்தி மீண்டும் மேடைக்கு அழைத்த விஷால் சூரியையும் அடித்தார். அதன் பின் தான் தெரிந்தது மூவரும் சற்று விளையாடினார்கள் என்று.
இதனை தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர் “இது போன்று பல திரைப்பட படப்பிடிப்புகளில் நடக்கும். ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் விஷால் என்னை அடிப்பது போல் நடித்தார். நானும் அழுவது போல் நடித்தேன். இதை பார்த்துக்கொண்டிருந்த அத்திரைப்படத்தின் கதாநாயகி பயந்துபோய் எனக்கு ஃபிளைட் டிக்கெட் போட்டுவிடுங்கள் என்று பதறிவிட்டார்” என கலகலப்பாக கூறினார். தற்போது இச்செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.