Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“வா” சொல்லிய “வில் அம்பு” நடிகர், “நோ” சொல்லிய “நட்சத்திர” நடிகரின் மகள்; அந்தோ பரிதாபம்!!

GOSSIPS

“வா” சொல்லிய “வில் அம்பு” நடிகர், “நோ” சொல்லிய “நட்சத்திர” நடிகரின் மகள்; அந்தோ பரிதாபம்!!

“வில் அம்பு” நடிகர் “நட்சத்திர” நடிகரின் மகளுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். ஆனால் அவரோ?

“வில் அம்பு” நடிகருக்கும் “நட்சத்திர” நடிகரின் மகளுக்கும் இடையே இருந்த ரிலேஷன்சிப் சமீபத்தில் உடைந்தது. அதன் பின் இருவரும் அவரவர்களின் வேலையை பார்க்க போய் விட்டனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் இருவரை சேர்த்து வைப்பதற்காக பல பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை. சமீபத்தில் கூட தங்களது இரு பிள்ளைகளின் மீது யார் பாசமாக இருக்கிறார்கள் என்பது குறித்து ஈகோ பிரச்சனை வர, அதனை தொடர்ந்து “நட்சத்திர” நடிகரின் மகள் “இனிமேல் பிள்ளைகளை வெளியே கூப்பிட்டு போக கூடாது” என “வில் அம்பு” நடிகருக்கு கண்டிஷன் போட்டார் எனவும்

அதன் பின் இனிமேல் பிள்ளைகளுடன் புகைப்படம் எடுக்கமாட்டேன் என “வில் அம்பு” நடிகர் சமாதானப் படுத்தியதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ரிலேஷன்சிப்பிற்கு கிரீன் சிக்னல் போட்டுள்ளாராம் “வில் அம்பு” நடிகர். அதாவது மீண்டும் நாம் சேர்ந்துவிடலாம் வா என “வில் அம்பு” நடிகர் “நட்சத்திர” நடிகரின் மகளுக்கு அழைப்பு விடுத்தாராம்.

ஆனால் “நட்சத்திர” நடிகரின் மகளுக்கு அவர் மேல் துளி கூட காதல் இல்லை போலும். அவரின் கிரீன் சிக்னலை ஆஃப் செய்து விட்டு ரெட் சிக்னல் போட்டு விட்டாராம் “நட்சத்திர” நடிகையின் மகள். இதனால் “வில் அம்பு” நடிகர் பெரும் மன உளைச்சலில் இருக்கிறாராம். “வில் அம்பு நடிகரால் நட்சத்திர நடிகரின் மகளை கன்வின்ஸ் செய்ய முடியவில்லையே, அந்தோ பரிதாபம்” என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Continue Reading

More in GOSSIPS

To Top