CINEMA
விக்ரம்-வேதா தயார்? எப்போ ரிலீஸ் தெரியுமா?
விக்ரம்-வேதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குனர்கள் டிவிட் செய்து உள்ளனர்.
தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “விக்ரம் வேதா”. வித்தியாசமான கதை சொல்லலை கையாண்டு பலரையும் “ஓ” போட வைத்த “விக்ரம் வேதா” திரைப்படம் வெளிவந்த போது வேற லெவல் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தை புஷ்கர்-காயத்ரி இணையர்கள் இயக்கினர். இவர்கள் இதற்கு முன் “ஓரம் போ”, “வ குவாட்டர் கட்டிங்” போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளனர்.
இந்நிலையில் “விக்ரம் வேதா” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் பாலிவுட்டிற்கு செல்வதாக தகவல் வெளிவந்தது. பாலிவுட்டிலும் புஷ்கர்-காயத்ரியே இயக்குகின்றனர் எனவும் செய்திகள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான செயிஃப் அலி கான் மற்றும் ஹிரித்திக் ரோஷன் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற தகவலும் வந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதற்கும் “விக்ரம் வேதா” என்றே பெயர் வைத்துள்ளனர். மாதவன் கதாப்பாத்திரத்தில் செயிஃப் அலி கானும், விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக டிவிட்டரில் புஷ்கர்-காயத்ரி இணையர்கள் டிவிட் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
Now that we have wrapped shoot, one thing we miss for sure. The warm hugs from HR at the beginning and end of the day. Truly blessed to work with you, Everyone knows how incredible an actor you are, but the warmth and genuine love you bring to the set is overwhelming😍@iHrithik pic.twitter.com/EbHmozljel
— Pushkar&Gayatri (@PushkarGayatri) June 10, 2022
அதில் இரு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அப்புகைப்படங்களில் புஷகர்-காயத்ரி இணையருடன் ஹிரித்திக் ரோஷனும் செயிஃப் அலி கானும் மகிழ்ச்சியுடன் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து அந்த டிவிட்டர் பதிவில் புஷ்கர்-காயத்ரி இணையர் “படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஹிரித்திக் ரோஷனின் அன்பான அரவணைப்பை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்வோம். உங்களோடு பணிபுரிய நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்” என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் Post production பணிகள் விரைவில் முடிவடைந்து கூடிய விரைவிலேயே இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
