CINEMA
“நாயகன் மீண்டும் வரார்”… வெளியானது விகரம் டைட்டில் தீம்
“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான டைட்டில் தீம் பாடலின் lyric வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
“விக்ரம்” திரைப்படம் நாளை கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்குகளிலும் Booking தாறு மாறாக நடைபெற்று வருகிறது.
கமல் ஹாசன் பல நாட்களாகவே “விக்ரம்” திரைப்படத்தை தீயாக புரோமோட் செய்து வருகிறார். இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு சென்றும் உலகின் பல நாடுகளுக்கு சென்றும் “விக்ரம்” திரைப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார். இதன் உச்சக்கட்டமாக நேற்று துபாயில் அமைந்துள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ ஒளிபரப்பப்பட்டது.
புர்ஜ் கலிஃபாவின் பிரம்மாண்ட கட்டிடத்தில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ வெளியான போது அங்கே ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டனர். மேலும் அங்கே வெளியாகும்போது கமல் ஹாசன் ரசிகர்களிடையே பங்கேற்றார். “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ புர்ஜ் கலிஃபாவில் வெளியானது திரையுலைகினரை “ஓ” போட வைத்துள்ளது.
இதனிடையே “விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் டைட்டில் டிராக்” பாடலின் Lyric வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே “பத்தல பத்தல”, “போர் கொண்ட சிங்கம்”, “Wasted” ஆகிய பாடல்களின் Lyric வீடியோ வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது “விக்ரம் டைட்டில் தீம்” பாடலின் Lyric வீடியோ வெளிவந்துள்ளது.
நாளை திரையரங்கங்கள் திருவிழா கோலம் காணும் நிலையில் தற்போது இப்பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ““விக்ரம்” திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் சார்பாக கமல் ஹாசனும், ஆர். மஹேந்திரனும் தயாரித்துள்ளனர். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.“விக்ரம்” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
