Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம் பிரபு is Back”.. மெரட்டல் ஆக்சன் பிளாக் Coming Soon…

CINEMA

“விக்ரம் பிரபு is Back”.. மெரட்டல் ஆக்சன் பிளாக் Coming Soon…

விக்ரம் பிரபு நடிக்கும் மிரட்டல் ஆக்சன் பிளாக் திரைப்படம் ஒன்று வெளிவர காத்திருக்கிறது.

“கும்கி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிய விக்ரம் பிரபு, அதன் பின் அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதளவில் வெற்றிக் காணவில்லை. “விக்ரம் பிரபு அவ்வளவுதான்” என்றும் “சிவாஜி பேரன் நிலைமையை பாரேன்” என்றும் பல பேச்சுக்கள் அடிப்பட்டன.

ஆனால் சமீபத்தில் வெளியான “டாணாக்காரன்” திரைப்படத்தின் மூலம் மாஸ் come back கொடுத்தார். காவலர் பயிற்சியில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் மனித தன்மையற்ற செயல்களையும் வெளிச்சம் போட்டு காட்டியது “டாணாக்காரன்”.

இதில் விக்ரம் பிரபு அவரது கதாப்பாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக நடித்திருப்பார். அவர் நடிப்பை பார்த்து திரையுலகமே “ஆ” என வாயை பிளந்தது. “விக்ரம் பிரபு நடிப்பில் புதிய பரிமாணம்” என பத்திரிக்கைகளில் பாராட்டுகள் குவிந்தன. மேலும் தமிழ்நாடு காவல் துறையே அத்திரைப்படத்தை பாராட்டிய நிகழ்வுகளும் நடந்தது.

இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு நடித்த “பாயும் ஒளி நீ எனக்கு” திரைப்படத்தின் வெறித்தனமான டீசர் ஒன்று வெளிவந்துள்ளது. டீசரை பார்க்கும் போது ஒரு பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படம் வெளிவர காத்திருப்பதாக தெரிகிறது.

“பாயும் ஒளி நீ எனக்கு” திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் தனஞ்சயா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

“பாயும் ஒளி நீ எனக்கு” திரைப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு “ரத்தமும் சதையும்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                   

Continue Reading

More in CINEMA

To Top