Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஆதித்த கரிகாலனாக ‘விக்ரம்”.. புதிய கெட் அப்-ஐ பாருங்க..

CINEMA

ஆதித்த கரிகாலனாக ‘விக்ரம்”.. புதிய கெட் அப்-ஐ பாருங்க..

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் சீயான் விக்ரம் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்தின் கெட் அப் தற்போது வெளியாகி உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணி ரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக இயக்க போகிறார் என அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து அத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, ஆகிய பலரும் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வந்தது.

அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. ஆனால் கொரோனாவால் பாதியிலேயே படப்பிடிப்பு நின்றது. இதனை தொடர்ந்து சென்ற வருடம் மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டிரைலர் ஜூலை மாதம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து வெளியிடப்போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் சில நேரங்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.

அதில் விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இட்டு குதிரையின் மேல் போர் வீரன் போல் உட்கார்ந்தபடி மாஸாக காட்சித் தருகிறார். தற்போது இப்போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top