Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” ஓடிடி ரிலீஸ் எப்போ ன்னு தெரியுமா?

CINEMA

“விக்ரம்” ஓடிடி ரிலீஸ் எப்போ ன்னு தெரியுமா?

“விக்ரம்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றிய நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

“விக்ரம்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு கலெக்சனை அள்ளிக்கொண்டு வருகிறது. கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்களையும் ஓவர் டேக் செய்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக பல திரையரங்குகளில் இன்றும் “விக்ரம்” திரைப்படம் வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டும் அல்லாது பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

“விக்ரம்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டது. மேலும் சேட்டலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியது.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் ஓடிடி வெளியீடு குறித்தான ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “விக்ரம்” திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை மாதம் 8 ஆம் தேதி வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“விக்ரம்” திரைப்படம் வெளியாகி இருபதே நாட்களில் பல கோடிகளில் வசூலை அள்ளியுள்ளது. அதாவது வேர்ல்ட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸில் சுமார் ரூ. 370 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தற்போது வருகிற ஜூலை மாதம் 8 ஆம் தேதி “விக்ரம்” திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top