CINEMA
விக்ரம் எடுத்த அதிரடி முடிவு.. இனிமே வேற லெவல் தான்!!
சீயான் விக்ரம் எடுத்த அதிரடி முடிவினால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். என்ன விஷயம் தெரியுமா?
சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமல்ஹாசனுக்கு பின் பல வேடங்களில் நடிக்கும் திறமை பொருந்திய நடிகர் என்றும் கூறலாம்.
சிறு வேடம் என்றாலும் அந்த வேடத்திற்காக இவர் செய்யும் மெனக்கெடல்கள் ரசிகர்களை “ஓ” போட வைக்கும். இவர் நடிப்பில் தற்போது “கோப்ரா”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன.
சமீபத்தில் தான் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் வெளியானது. இதில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இவர் நடித்த “கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியாக உள்ளது. சீயான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அத்திரைப்படம் 19 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதையம்சமாக அமைய உள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீயான் விக்ரம் திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது விக்ரம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமான அக்கவுண்ட்டை தொடங்கியுள்ளார். மேலும் அதில் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் “15 வருடம் லேட் ஆகிடுச்சு ன்னு நினைக்கிறேன்” என நக்கலாக கூறினார். மேலும் அதில் பா ரஞ்சித் திரைப்படத்திற்கான கெட் அப்புடன் இருக்கிறார். இனிமேல் தனது டிவிட்டர் பக்கம் வழியாக அடிக்கடி ரசிகர்களை சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.
— Chiyaan Vikram (@chiyaan) August 12, 2022