Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஆரம்பிக்கலாங்களா…”விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

CINEMA

“ஆரம்பிக்கலாங்களா…”விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கிறது.

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சத்யராஜ், அம்பிகா, டிம்பிள் கம்பாடியா, லிஸ்ஸி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். இத்திரைப்படத்திற்கு கதை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இத்திரைப்படம் அக்காலத்திலேயே பிரம்மாண்ட கதைக்களத்துடன் எடுக்கப்பட்டதாக அறியப்பட்டது. இத்திரைப்படத்தின் பாடல்கள் எல்லாம் மாஸ் ஹிட். விக்ரம் திரைப்படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் ஆகும்.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் லோகேஷ் கனகராஜ். இவரது முதல் படமே பெரிதளவில் பேசப்பட்டது. எனினும் அதற்கடுத்து நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த “கைதி” திரைப்படம் லோகேஷை மாஸ் ஹீரோ இயக்குனராக தூக்கிவிட்டது. அதன் பிறகு எதிர்பாரா விதமாக நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பு. மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவாக விஜய்யும் வில்லனாக விஜய் சேதுபதியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை குறைவில்லாமல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து யாரும் சற்றும் எதிர்பாரா விதமாக நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென “விக்ரம்” என்ற பெயரில் அறிவிப்பு டீசர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. வேறு எதுவும் அப்டேட் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சென்ற வருட கடைசியில் டீசரும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக தகவலும் வந்தது.

இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது வரும் மே 15 ஆம் தேதி விக்ரம் திரைப்படத்தின் ஆடியோவும் டிரைலரும் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாலர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading

More in CINEMA

To Top