Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” Wasted… சும்மா தாறு மாறு எடிட்..

CINEMA

“விக்ரம்” Wasted… சும்மா தாறு மாறு எடிட்..

“விக்ரம்” திரைப்படத்தின் தாறு மாறு பாடலான “Wasted” பாடலின் lyric வீடியோ வெளிவந்துள்ளது.

கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கமல் ஹாசன் இத்திரைப்படத்தை தயாரிக்க, ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து பட்டையை கிளப்பியது. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பத்தல பத்தல” பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து சக்கை போடு போட்டது. கமல் ஹாசன் குரலில் சும்மா தர லோக்கலாக இறங்கி குத்தியிருக்கிறார் என பலர் குதூகலத்தில் பாராட்டி வந்தனர்.

அதன் பின் சமீபத்தில் “போர் கொண்ட சிங்கம்” பாடல் வெளியாகி ரசிகர்களை உருக வைத்தது. அதில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் மகனை பற்றி தந்தை பாடும் விதமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது “Wasted” பாடல் வெளிவந்துள்ளது. இப்பாடல் துள்ளல் இசையோடு குதூகலமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படத்தில் இடம்பெற்ற “Master the blaster” பாடலை போலவே இப்பாடலும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே Rap பாடல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடலின் Lyric வீடியோ Edit-கள் தாறுமாறாக உள்ளது.

இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். ஹைசன்பர்க் என்பவர் இப்பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ வேலைகள் தீயாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இப்பாடல் மேலும் ரசிகர்களை வெறியேத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

                 

Continue Reading

More in CINEMA

To Top