CINEMA
“விக்ரம்” 3 ஆம் பாகம்? சூர்யா வில்லனா? சஸ்பென்ஸை வெளியிட்ட கமல்
“விக்ரம்” திரைப்படம் 3 ஆம் பாகமும் இருக்கிறது என்ற சஸ்பன்ஸை உடைத்துள்ளார் கமல்.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உருவான “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோக்கள் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிரைலரில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோரின் தோற்றங்களும் படு பயங்கரமாய் இருந்தது.
இதனைத் தொடர்ந்து “விக்ரம்” திரைப்படம் என்பது இரண்டாம் பாகம் எனவும், “விக்ரம்” 3 ஆம் பாகமும் இருக்கிறது, அதற்கு Lead கொடுப்பதற்காகத் தான் ‘சூர்யா” வருகிறார் என கேன்ஸ் விழாவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் கமல். “விக்ரம்” திரைப்படம் 3 ஆம் பாகமும் வெளிவரவுள்ளது என்ற சஸ்பன்ஸை கமல் உடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
“விக்ரம்” டிரைலரை பார்க்கும் போது ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கிறதாக ரசிகர்கள் உற்சாகத்தோடு இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே திரைப்படத்திற்கு வெறித்தனமாக வெறி ஏற்றிக்கொண்டு வெயிட் செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு “விக்ரம்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் அவர்களை மேலும் வெறியேத்தியது.
“விக்ரம்” திரைப்படம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் ரசிகர்கள் படத்திற்காக ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். மேலும் “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்ற தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெளியிட்டு விட்டார். அதில் இருந்து “விக்ரம்” டிரைலரை டிகோடிங் செய்து சூர்யா எங்கேயாவது தென்படுகிறாரா என்பதனை இணையவாசிகள் தேடிக் கொண்டிருந்தது தனிக்கதை.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் மூன்றாம் பாகமும் வெளிவரவுள்ளதாக கமல் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.