Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா?

CINEMA

“விக்ரம்” இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா?

“விக்ரம்” திரைப்படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் ஆகிருக்கிறது தெரியுமா?

கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது “விக்ரம்” திரைப்படம். கமல் ஹாசன் திரைப்படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆன நிலையில் அனைவரும் வெறியோடு ‘விக்ரம்” திரைப்படத்திற்கு காத்திருந்தனர்.

அதுவும் லோகேஷ் கனகராஜ் டைரக்டர் என்பதால் ரசிகர்கலின் உற்சாகம் அதிகரித்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான “விக்ரம்” திரைப்படத்தை கோலாகலமாக ரசிகர்கள் வரவேற்றனர்.

உலகளவில் திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்களே அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் திரையரங்குகளில் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் கமல் திரைப்பட வரலாற்றிலேயே செய்யாத சாதனையை செய்துள்ளது. அதாவது கடந்த இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது. இது கமல் திரைப்பட வரலாற்றிலேயே அதிவேக வசூல் என கூறப்படுகிறது.

படம் வெளிவரவதற்கு முன்பே “விக்ரம்” திரைப்படத்திற்கான புரோமோ வேலைகள் தீயாக நடந்தன. அதனால் Ticket booking படு பயங்கரமாக இருந்தது. ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏங்கி கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.

அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

கமல் ஹாசன் வெறித்தனமாக நடித்திருக்கிறார். Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”. அனிருத்தின் இசை ஒவ்வொரு காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top