CINEMA
“விக்ரம்” First day வசூல் எவ்வளவு அள்ளிருக்கு தெரியுமா?
“விக்ரம்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு திரைப்படத்தை கண்டு கழித்தனர்.
ரசிகர்களின் வாழ்த்து மழையில் சமூக வலைத்தளமே ஸ்தம்பித்து போனது. அந்தளவிற்கு ரசிகர்கள் “விக்ரம்” திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.
அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
கமல் ஹாசன் வெறித்தனமாக நடித்திருக்கிறார். Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”. Gun firing காட்சிகளும் சண்டை காட்சிகளும் அபாரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அனிருத்தின் இசை ஒவ்வொரு காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் எவ்வளவு கலெக்சன் அள்ளியுள்ளது என்பது குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதாவது “விக்ரம்” திரைப்படம் ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 20 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களிலேயே “விக்ரம்” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
