CINEMA
“விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளாரா? Leak-ஆன ஆடியோவால் ரசிகர்கள் குழப்பம்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய “விக்ரம்” வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் சூர்யா அத்திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், அவர் திரைப்படத்தில் பேசிய வசனங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ்-கமல் கூட்டணி மாஸாக கலக்கப்போவது உறுதி என ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி கிடக்கிறார்கள்.
அதே போல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மாஸ் ஹீரோக்களின் கூட்டணி வேறு. படம் வெளியாகும் நாளில் நிச்சயம் திருவிழா தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
இதனிடையே “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யாவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது, ஆனால் அதன் உண்மைத் தன்மையை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒரு வேளை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்களோ என கூட இணையத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா பேசிய வசனங்கள் இணையத்தில் கசிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.
இன்று மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு “விக்ரம்” திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்கள் திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். சென்ற ஆண்டில் “விக்ரம்” திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா நடித்திருப்பதாகவும் அவர் பேசிய வசனங்கள் ஆடியோவாக கசிந்திருக்கிறது எனவும் இணையத்தில் செய்திகள் பரவி வருவது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Audio Leaked from #Vikram shooting! @Suriya_offl Voice.. Paaah 🥵🤯🔥🔥#VaadiVaasal #EtharkkumThunindhavan pic.twitter.com/rQXrQwdygq
— Anush (@Anush34339923) May 13, 2022
