Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா?

CINEMA

“விக்ரம்” ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா?

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் எவ்வளவு மணி நேரம் தெரியுமா?

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில்  வெளிவரவுள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தின் டிரைலர் சென்ற வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் எக்ஸ்பெக்டேஷன் லெவல் எகிறியுள்ளது.

மேலும் நேற்று “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அவ்விழாவில் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித், சிம்பு, ராதிகா சரத்குமார் என திரைத் துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதியாக கமல் ஹாசன் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது. அவர் பேசுகையில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். “ஓடிடி என்ற விநியோக தளம் வரும் என அன்றே சொன்னேன்” என அவர் கூறிய போது கரகோஷங்கள் விண்ணை பிளந்தன. மேலும் “ஹிந்தி ஒழிக என்று சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? தமிழ் வாழ்க என்று சொல்வோம்” என கூறியது ரசிகர்களை புல்லரிக்க செய்தது.

இதனிடையே விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “கமலை மிரட்டி திரைப்படத்தை வாங்கி விட்டீர்களா? என பலரும் கேட்கின்றனர். நான் அவரை மிரட்டவும் இல்லை, யாரும் கமல் ஹாசனை , மிரட்டவும் முடியாது. மிரட்டினால் பயப்படக்கூடிய ஆளும் அவர் இல்லை” என கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மேலும் அவ்விழாவில் பேசிய சிம்பு “இப்போ ஏதோ PAN INDIA என்றெல்லாம் சொல்கிறார்கள், அந்த” மருத நாயகம்” திரைப்படத்தை ஒரு ஐந்து நிமிடம் போட்டுக் காட்டுங்களேன் இவுங்களுக்கு” என கூறிய போது அரங்கமே அதிர்ந்தது.

இந்நிலையில்”விக்ரம்” திரைப்படத்திற்காக எக்ஸ்பெக்டேஷனில் வெறி கொண்டு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது “விக்ரம்” திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

“விக்ரம்” திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in CINEMA

To Top