CINEMA
“விக்ரம்” படத்தின் புதிய பாடல் வெளியீடு; மாஸ் காட்டும் அனிருத்..
“விக்ரம்” திரைப்படத்தின் புதிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “போர் கொண்ட சிங்கம்” பாடலின் EDM வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. கமல் ஹாசன் தன்னுடைய மகன் இறந்த போது தன் பேரன் மீது அன்பு செலுத்தும் காட்சிகளின் பின்னணியில் இப்பாடல் இடம்பெறும்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள “போர் கொண்ட சிங்கம்” EDM பாடல் கமல் ஹாசனின் வீட்டிற்குள் அவரின் பேரனை கடத்த ரவுடி கும்பல் இறங்கியபோது நடக்கும் சண்டைக் காட்சிகளின் பின்னணியில் இப்பாடல் ஒலிக்கிறது. மாஸ் சண்டை காட்சிகளுக்கு இப்பாடல் பக்காவாக பொருந்தி இருக்கிறது. இப்பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 370 கோடியை தாண்டி கலெக்சன் அள்ளிக் கொண்டிருக்கிறது. “பாகுபலி 2” திரைப்படத்தின் சாதனையை “விக்ரம்” ஓவர் டேக் செய்து கொண்டிருக்கிறது.
அது மட்டும் அல்லாது கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
“விக்ரம்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். குறிப்பாக “பத்தல பத்தல”, “போர் கொண்ட சிங்கம்” “நாயகன் மீண்டும் வரான்” போன்ற பாடல்கள் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தது.
“விக்ரம்” திரைப்படத்தின் பின்னணி இசையிலும் அனிருத் மாஸ் காட்டியிருப்பார். ஒவ்வொரு காட்சியிலும் காட்சிக்கு தகுந்தார் போல் அவரின் இசை ஒட்டி உறவாடும். குறிப்பாக சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கும் பி ஜி எம்கள் ரசிகர்களை Goosebumps-ல் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது “போர் கொண்ட சிங்கம்” பாடலின் EDM பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
