CINEMA
“விக்ரம்” De-Aging காட்சிகள் வெளியிடப்படும்; ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்
“விக்ரம்” திரைப்படத்தில் De-Aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் தனியாக வெளியிடப்படும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
“விக்ரம்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே அத்திரைப்படத்தில் கமலை இளமையாக காட்ட De-Aging தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் திரைப்படத்தில் De-Aging தொழில்நுட்ப காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.
ரசிகர்கள் இக்காட்சிகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அக்காட்சிகள் இடம்பெறாமல் போன நிலையில், பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் De-Aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் எக்ஸ்க்ளுசிவ் ஆக வெளியிடப்படும் என கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் De-Aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளின் பணி முடிவடையாத நிலையில் அக்காட்சிகள் திரைப்படத்தில் பயன்படுத்தப்படவில்லை எனவும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
கமல் ஹாசன் கேரியரிலேயே வேற லெவல் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது. ஆதலால் கமல் மிகவும் குஷியாக இருக்கிறார்.
பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
“விக்ரம்” திரைப்படம் உலகம் முழுவதும் செமத்தியான கலெக்சனை அள்ளியுள்ளது. அதாவது வேர்ல்ட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 300 கோடியை நெருங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே கடந்த ஒரு வாரத்தில் ரூ. 105 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.