CINEMA
‘விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் எப்போன்னு தெரியுமா?
விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்தான புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் லோகேஷ் கனகராஜ். இவரது முதல் படமே பெரிதளவில் பேசப்பட்டது. எனினும் அதற்கடுத்து நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த “கைதி” திரைப்படம் லோகேஷை மாஸ் ஹீரோ இயக்குனராக தூக்கிவிட்டது. அதன் பிறகு எதிர்பாரா விதமாக நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பு. மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவாக விஜய்யும் வில்லனாக விஜய் சேதுபதியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை குறைவில்லாமல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து யாரும் சற்றும் எதிர்பாரா விதமாக நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென “விக்ரம்” என்ற பெயரில் அறிவிப்பு டீசர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. வேறு எதுவும் அப்டேட் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சென்ற வருட கடைசியில் டீசரும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக தகவலும் வந்தது.
ஜூன் 3-ல் விக்ரம் திரைப்படம் வெளிவரவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை “ஹாட்ஸ்டார்” நிறுவனம் வாங்கியது. அதே போல் இத்திரைப்படத்தின் சேட்டலைட் உரிமம் விஜய் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளது. இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மொழியின் சேட்டலைட் உரிமம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு சென்றது போல் மற்ற மொழிகளின் உரிமமும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கே சென்றுள்ளது. இத்திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பிரமாண்டமான இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!
மே 15-ஆம் தேதி – மாலை 6 மணிக்கு
நேரு உள்விளையாட்டரங்கம், சென்னை. #KamalHaasan #VikramFromJune3 #VikramAudioLaunch #VikramTrailer pic.twitter.com/Fd5nHZKUYt
— Vijay Television (@vijaytelevision) May 10, 2022