Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“முள் கரண்டியில் ரத்த வெள்ளம்”.. வைரலாகும் ஏஜெண்ட் டீனா போஸ்டர்

CINEMA

“முள் கரண்டியில் ரத்த வெள்ளம்”.. வைரலாகும் ஏஜெண்ட் டீனா போஸ்டர்

“விக்ரம்” திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெறித்தனமான போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“விக்ரம்” திரைப்படத்தில் ஏஜேண்ட் டீனா என்ற கதாப்பாத்திரம் ஒரு Goose bumps கதாப்பாத்திரமாக பார்வையாளர்களுக்கு அமைந்தது. கமல் ஹாசன் வீட்டில் பணியாளாக இருந்த ஏஜெண்ட் டீனா திடீரென ஒரு Transformation கொடுப்பார்.

கமல் ஹாசனின் பேரனை கடத்தி கொண்டு போவதற்கு ஒரு கும்பல் கமல் வீட்டிற்குள் இறங்கிவிடும். அப்போது கமலின் மருமகளையும் அப்பேரனையும் காப்பாற்ற திடீரென Transformation ஆகி ரவுடிகளை பறந்து பறந்து அடித்து தூள் கிளப்பி விடுவார். இக்கதாப்பாத்திரம் பார்வையாளர்களால் பரவலாக ரசிக்கப்பட்டது.

“விக்ரம்” திரைப்படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்திருந்தவர் வசந்தி. இவர் ஒரு டேன்சர். பல திரைப்படங்களில் பின்னணியில் Troop dancer ஆக நடனம் ஆடி இருக்கிறார். நடன அமைப்பாளர் தினேஷுடன் பணியாற்றியவர்.

“விக்ரம்” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் விஜய், அஜித் பாடல்களில் பின்னணியில் வசந்தி நடனம் ஆடும் பல புகைப்படங்களை இணையத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். அதன் பின் பல சமூக ஊடக தொலைக்காட்சிகளும் வசந்தியை பேட்டிக் கண்டனர்.

இந்நிலையில் வசந்தி ஏற்று நடித்த ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரத்திற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவரின் கதாப்பாத்திரத்தை உணர்த்துவது போல் நாம் வீட்டில் பயன்படுத்தும் முள் கரண்டியில் ரத்தம் தெறிக்கும் வகையில் அந்த போஸ்டர் வெறித்தனமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…

Continue Reading

More in CINEMA

To Top