CINEMA
நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயரில் “விக்ரம்”…
அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் ஸ்குயரில் “விக்ரம்” திரைப்படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவான “விக்ரம்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு திரைப்படத்தை கண்டு கழித்தனர்.
ரசிகர்களின் வாழ்த்து மழையில் சமூக வலைத்தளமே ஸ்தம்பித்து போனது. அந்தளவிற்கு ரசிகர்கள் “விக்ரம்” திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Fan boy ஆக பல சுவாரசியமான அம்சங்களை திரைப்படத்தில் இணைத்திருந்தார். கமல் ஹாசன் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருந்தது.
அதே போல் இன்டர்வெல் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு பெரிய Goose bumps ஆக இருந்தது. கிளைமேக்ஸில் சூர்யா இடம்பெற்ற காட்சியும் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
கமல் ஹாசன் வெறித்தனமாக நடித்திருக்கிறார். Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி வில்லத்தனமாக கலக்கி இருக்கிறார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது “விக்ரம்”. Gun firing காட்சிகளும் சண்டை காட்சிகளும் அபாரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அனிருத்தின் இசை ஒவ்வொரு காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக மையமான நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயரில் “விக்ரம்” திரைப்படத்தின் ஆல்பம் குறித்தான விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயரில் “விக்ரம்” திரைப்படத்தின் ஆல்பம் குறித்தான விளம்பரம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Love Beyond Boundaries !
Ulaganayagan’s #Vikram ft. In iconic Times Squares. #KamalHaasan #VikramRoaringSuccess #VikramInAction @ikamalhaasan @anirudhofficial @Dir_Lokesh @Udhaystalin @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth pic.twitter.com/AWVuAffIBl— Raaj Kamal Films International (@RKFI) June 3, 2022
