CINEMA
விக்ரம் பிஜிஎம்மை அனிரூத் இங்கே இருந்து தான் காப்பி அடித்தார்??
“விக்ரம்” திரைப்படத்தின் பின்னணி இசையை அனிரூத் இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் இருந்து தான் காப்பி அடித்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளிவந்து தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக திகழ்ந்தது. இத்திரைப்படம் கமல் ஹாசன் திரைப் பயணத்திலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாகவும் அமைந்தது.
இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் லோகேஷ் கனகராஜ்ஜின் உதவி இயக்குனர்களுக்கு கமல் ஹாசன் மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
மேலும் இத்திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக வழங்கினார்.
“விக்ரம்” திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக “பத்தல பத்தல”, “போர் கொண்ட சிங்கம்” போன்ற பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டது.
அதே போல் “விக்ரம்” திரைப்படத்தின் பின்னணி இசையும் மாஸ் கிளப்பியது. ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாணடமாக தெரியவைப்பதை அனிரூத் தனது பிஜிஎம் மூலம் சாத்தியப்படுத்தினார்.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல பிஜிஎம் ஒன்று ஒரு ஆங்கில திரைப்படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற ஒரு பின்னணி இசையை அனிரூத் அப்படியே காப்பி அடித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வைரல் வீடியோ இதோ…
enna ani idhella😳 pic.twitter.com/1MwtMl8HPg
— Ranjithkumar (@Ranjith8260) August 4, 2022