CINEMA
பாகுபலியை ஓரங்கட்டிய “விக்ரம்”; கமலின் தரமான சம்பவம்
கமல் ஹாசன் நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் “பாகுபலி 2” திரைப்படத்தை ஓரங்கட்டியுள்ளது தெரியுமா?
கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகி உள்ளது. கமல் ஹாசன் கேரியரிலேயே வேற லெவல் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது. ஆதலால் கமல் மிகவும் குஷியாக இருக்கிறார்.
பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
“விக்ரம்” திரைப்படம் உலகம் முழுவதும் செமத்தியான கலெக்சனை அள்ளியுள்ளது. அதாவது வேர்ல்ட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 300 கோடியை நெருங்கி உள்ளது. அதே போல் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் ஒரு தியேட்டர் உரிமையாளர் கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் “பாகுபலி 2” திரைப்படத்தை ஓரங்கட்டி உள்ளது என பதிவிட்டு உள்ளார். அதாவது ஒரு வாரத்திலேயே “பாகுபலி 2” திரைப்படத்தின் ரெகார்டை தகர்த்து கொண்டு “விக்ரம்” திரைப்படம் சென்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
#Vikram does the unthinkable. Breaks #Baahubali2 5 year old record for maximum footfalls in one week @RohiniSilverScr Historic !!!
— Nikilesh Surya 🇮🇳 (@NikileshSurya) June 9, 2022
கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “கே. ஜி. எஃப் 2” திரைப்படத்தை போலவே “விக்ரம்” திரைப்படமும் ஒரு வாரம் ஆகியும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கமே நிறைந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வட இந்தியாவில் “விக்ரம்” திரைப்படத்திற்கு போட்டியாக வெளியான “சாம்ராட் பிரித்விராஜ்” திரைப்படம் படு தோல்வியை கண்டுள்ளது. “சாம்ராட் பிரித்விராஜ்” திரைப்படம் ஓடிய தியேட்டர்களில் “விக்ரம்” திரைப்படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
