TELEVISION
முடிவுக்கு வந்த விஜய் டிவியின் முக்கிய சீரியல்… படப்பிடிப்பு குழுவினர் வெளியிட்ட வீடியோ
பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த முக்கிய தொலைக்காட்சி தொடர் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியின் தொலைக்காட்சி தொடர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. புது விதமான ரியாலிட்டி ஷோக்கள், மக்கள் மனதை கவர்ந்த தொலைக்காட்சி தொடர்கள் என விஜய் தொலைக்காட்சி நம் வாழ்வில் முக்கிய பங்காக விளங்கி வருகிறது.
குறிப்பாக சமீப காலங்களில் தொடங்கிய “பிக் பாஸ்’ மற்றும் “குக் வித் கோமாளி” ஆகிய நிகழ்ச்சிகள் தமிழகத்தின் மொத்த ரசிகர்களையும் வலைத்துப் போட்டு விட்டது.
மேலும் சமீப காலத்தில் தொடங்கப்பட்ட தொடர்களான “பாக்கியலட்சுமி”, “பாண்டியன் ஸ்டோர்ஸ்”, “ஈரமான ரோஜாவே”, “பாரதி கண்ணம்மா”, “காற்றுக்கென்ன வேலி”, “தென்றல் வந்து என்னை தொடும்”, “தமிழும் சரஸ்வதியும்” ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்த தொடர்களாகும்.
இதே வரிசையில் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரையும் சேர்த்துக் கொள்ளலாம். இத்தொடரின் முதல் சீசன் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதில் மிர்ச்சி செந்தில், ரக்சா ஹோலா, ராஷ்மி ஜெயராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரின் சீசன் 2 கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் மிர்ச்சி செந்தில், மோனிஷா அர்ஷாக், பிக் பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன், பவித்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இத்தொடரில் முதலில் மஹாவாக ரக்சிதா மஹாலட்சுமி தான் நடித்து வந்தார். அதன் பிறகு அவர் விலகிய பின் அவருக்கு பதிலாக தான் மோனிஷா அர்ஷாக் தற்போது அக்கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2 தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் முடிவை கொண்டாடும் வகையில் படப்பிடிப்பு குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் நடிகைகள் கேக் வெட்டி இறுதி நாள் படப்பிடிப்பை முடித்துள்ளதாக தெரிய வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ரக்சிதா அதில் “ஒரு முடிவு என்பது ஒரு புதிய தொடக்கம் என பலர் கூறுவார்கள். இது மொத்த குழுவிற்கும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கட்டும். லவ் யூ ஆல்” என குறிப்பிட்டுள்ளார்.
