CINEMA
ஏர்போர்ட்டில் மாஸாக தென்பட்ட தளபதி விஜய்.. வைரல் வீடியோ
விமான நிலையத்தில் மாஸாக தென்பட்ட விஜய்யின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தற்போது நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் First Look, Second look, Third look போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பின. விஜய் பிறந்த நாளை ஒட்டி வெளிவந்த அந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக அமைந்தது.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதே போல் இவர்களுடன் ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு “வாரசுடு” என்று பெயர் வைத்திருக்கின்றனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவருகிறது.
#Varisu @actorvijay pic.twitter.com/VnXI2QMMAL
— Vamshi Paidipally FC (@Dir_VamshiFC) July 3, 2022
இந்நிலையில் விமான நிலையம் ஒன்றில் விஜய் தென்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் முன்னே செல்ல அவருக்கு பின்னால் வரும் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டே வருகிறார். அப்படி அவர் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைகிறார். லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் விஜய் கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் லோகேஷ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் கலக்கி இருப்பார். இந்நிலையில் தற்போது மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
