CINEMA
விமான நிலையத்தில் சாதாரண ஆளாக வரிசையில் நின்ற தளபதி!! வைரல் புகைப்படம்
விமான நிலையத்தில் சாதாரண மனிதர்கள் போலவே விஜய் வரிசையில் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. படக்குழுவினர் பலரும் மிகவும் வெறித்தனமாக உழைத்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் ஒரு ரோலில் நடிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறுவதாக அறியப்படுகிறது. விஜய் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு சென்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் விஜய் ஜனங்களோடு ஜனங்களாக வரிசையில் நிற்கிறார். இப்புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் தீயாக பரப்பி வருகின்றனர். அப்புகைப்படம் இதோ…
“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சுவாரசியமான குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் சரத்குமார் இதனை சமீபத்திய பேட்டியில் மறுத்துவிட்டார்.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.