CINEMA
விஜய் சேதுபதி படத்திற்கு 4 சர்வதேச விருதுகள்… அடி தூள்!!
நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படத்திற்கு 4 சர்வதேச விருதுகளை பெற உள்ளார். எந்த திரைப்படத்திற்காக இத்தனை விருதுகள் என்று தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதி ஒரு பன்முக கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. தன் இமேஜ்ஜை பற்றி எல்லாம் சிந்திக்காமல் தனக்கு நல்ல கதாப்பாத்திரம் என்று தோன்றும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துக்கொடுப்பவர் இவர்.
விஜய் சேதுபதியின் வளர்ச்சி பலரையும் அசரவைக்கும் ஒன்று. பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது ஒரு பேன் இந்திய நடிகர். பாலிவுட்டில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார் என்ற செய்தி பலரும் அறிந்ததே.
கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர கதாப்பாத்திரமாக என எந்த ரோல் கொடுத்தாலும் அசத்தும் விஜய் சேதுபதி, சமீபத்தில் ஒரு எளிய மனிதனாக நடித்த திரைப்படம் தான் “மாமனிதன்”. இத்திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
இத்திரைப்படம் குடும்ப திரைப்படமாக பலரும் கொண்டாடினர். விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் “மாமனிதன்” திரைப்படம் 4 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.
அதாவது பூடான் நாட்டில் நடைபெற்ற DRUK சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த குடும்பப் படம் போன்ற பிரிவுகளில் விருதுகள் வாங்கியுள்ளது. மேலும் சிறந்த இயக்குனருக்கான விருதை சீனு ராமசாமியும் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும் பெற்றுள்ளனர். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “விடுதலை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
