CINEMA
அஜித் பட இயக்குனருடன் இணைய உள்ள விஜய் சேதுபதி.. மாஸ் தகவல்..
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் தற்போது தனது ஐரோப்பிய பயணங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பி உள்ளார். கூடிய விரைவில் “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
“AK 61” திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.
“AK 61” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Robbery-ஐ மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என அறியப்படுகிறது. இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் போதை பொருள் கடத்தல் கும்பல் பற்றியது. அதே போல் இந்த “AK 61” திரைப்படமும் ஒரு சமூக விழிப்புணர்வு கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவது போல் தெரிகிறது.
இந்நிலையில் ஹெச் வினோத் “AK 61” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் குறித்தான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் நன்றாக போகிறது எனவும் ஹீரோவாக நடிக்கும் படங்கள் சமீபத்தில் கைக்கொடுக்கவில்லை எனவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனால் விஜய் சேதுபதி இனி ஹீரோ ரோலில் நடிக்கும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என ஒரு கிசுகிசு பரவி வந்தது. இந்நிலையில் ஹெச் வினோத் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
