CINEMA
கமல் ஹாசனை அப்படியே காப்பி அடித்த விஜய் சேதுபதி.. இது தெரியாம போச்சே!!
கமல் ஹாசனின் நடிப்பை அப்படியே காப்பி அடித்து விஜய் சேதுபதி நடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “குணா”. இத்திரைப்படத்தை சந்தான பாரதி இயக்கியிருப்பார். “கண்மணி அன்போடு காதலன்”, “பார்த்த விழி பார்த்தபடி” ஆகிய பிரபலமான பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான்.
“அபிராமி அபிராமி” என்ற பிரபலமான வசனமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் தான். இவ்வாறு மக்களின் மனதில் பதிந்து போன குணா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை விஜய் சேதுபதி அப்படியே காப்பி அடித்துள்ளது வைரல் ஆகி வருகிறது.
அதாவது “விக்ரம்” திரைப்படத்தில் சந்தனமாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஒரு கவுந்து போன ஆட்டோவில் இருந்து எழுந்து படுத்தபடியே உருண்டு கீழே இறங்குவார். இந்த காட்சி அப்படியே “குணா” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
“குணா” திரைப்படத்தில் கமல் கதாநாயகியை கடத்தி வரும் காட்சியில் இவ்வாறு ஒரு சீன் இடம்பெற்றுள்ளது. இந்த இரு காட்சிகளையும் இணைத்தவாறு ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆகையால் லோகேஷிற்கு “குணா” திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த காட்சி பிடித்திருந்தபடியால் அதனை Reference ஆக எடுத்து விஜய் சேதுபதியில் Intro காட்சியாக வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வீடியோ இதோ…
This is Epic.. 😀💥💥@Dir_Lokesh#Kamalhaasan #Vikram#VijaySethupathi #VikramOnDisneyplusHotstar pic.twitter.com/pk0SnkJG8n
— ᴄɪɴᴇᴍᴀ ᴡᴏʀʟᴅ 🎥 (@Cinemaw_) July 8, 2022
கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் தற்போது வரை ரூ. 410 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.