CINEMA
விஜய் பட நடிகைக்கு ரத்த காயம்.. சோகத்தில் திரை உலகம்..
விஜய் பட நடிகைக்கு படப்பிடிப்பின் போது ரத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளிவந்த “தமிழன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டின் டாப் மோஸ்ட் ஹீரோயின்களில் ஒருவர். இவர் உலக அழகி பட்டம் வாங்கியவரும் கூட.
இவர் பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸ் என்பவரும் பல நாட்கள் காதலித்து வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணத்திற்கு பல சர்ச்சைகளும் எழுந்தன. அதாவது பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் வயதில் மிக இளையவர் என்பதால் பலரும் கேலி செய்தனர். ஆனால் பிரியங்கா சோப்ரா இதனை கண்டுகொள்ளவே இல்லை. “திருமணம் என்பது என் தனிப்பட்ட உரிமை. நான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவெடுக்க வேண்டும்” என கூறினார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரியங்கா சோப்ரா முகத்தில் காயங்கள் தென்படுகின்றன. முகமும் பெரும் சோகத்தில் இருக்கிறது.
அப்புகைப்படத்தை பகிர்ந்த அவர் அதில் “உங்கள் வேலையில் கடினமான நாள் என்று என்றாவது இருந்திருக்கிறதா?” என குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா தற்போது “இட்ஸ் ஆல் கம்மிங் பேக் டூ மீ” என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் முகத்தில் காயம் பட்டவாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View this post on Instagram
