CINEMA
“கோமாளி” இயக்குனரை திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா?
“கோமாளி” திரைப்படத்தின் இயக்குனரை விஜய் ரசிகர்கள் திட்டி திர்த்து வருகிறார்கள். எதற்காக தெரியுமா?
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கோமாளி”. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
“கோமாளி” திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படைப்பை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு “லவ் டூடே” என்று பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
அதாவது 2014 ஆம் ஆண்டு “கத்தி” திரைப்படம் வெளிவந்தபோது ரஜினிகாந்தின் “லிங்கா” திரைப்படத்தை ஒப்பிட்டு ஒரு பதிவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரதீப்.
அதில் “கத்தி படத்திற்கு சுலபமாக டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் ரஜினி திரைப்படத்திற்கு அவ்வளவு சுலபமாக டிக்கெட் கிடைக்கவில்லை” என பகிர்ந்திருந்தார். அதாவது கத்தி திரைப்படத்திற்கு யாரும் போகவில்லை என்ற மறைமுக அர்த்தத்தில் கூறியதாக ரசிகர்கள் அவரை திட்டி வந்தனர்.
மேலும் பிரதீப், கத்தி திரைப்படம் சுறா படத்தை போல் இருந்தது எனவும் கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்
இந்நிலையில் தற்போது விஜய் படத்தின் டைட்டிலேயே தன் திரைப்படத்திற்கு வைத்துள்ளார் பிரதீப். அதாவது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஜய் நடித்த “லவ் டூடே” திரைப்படத்தின் டைட்டிலைத் தான் தற்போது பிரதீப் தனது புதிய திரைப்படத்திற்கு வைத்துள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் “அன்றைக்கு விஜய்யை பற்றி அப்படி பேசிவிட்டு தற்போது விஜய் திரைப்படத்தின் டைட்டிலேயே வைத்துள்ளார்” என பிரதீப்பை கேலி செய்து வருகின்றனர்.
பிரதீப் இயக்கும் “லவ் டூடே” திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டெர்டெயின்மன்ட் நிறுவனம் தயாரிக்கிறனர் என்பது கூடுதல் தகவல்.