CINEMA
விஜய் பாடலுக்கு நடனமாடிய விஜய் தேவரகொண்டா.. வைரல் வீடியோ
“மாஸ்டர்” திரைப்படத்தில் இடம்பெற்ற “வாத்தி கம்மிங்”பாடலுக்கு விஜய் தேவரகொண்டா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள “லைகர்” திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளிவர உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
பூரி ஜெகன்னாத் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்னாத், அபூர்வா மேத்தா, ஹிரு யாஷ் ஜோகர் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். “லைகர்” திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.
“லைகர்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் “மாஸ்டர்” திரைப்படத்தில் இடம்பெற்ற “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா தெலுங்கில் “பெல்லி சொப்புலு” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும் “அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பரவலாக அறியப்பட்டார்.
அதன் பின் தமிழில் நேரடியாக “நோட்டா” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர். இன்றைய இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் திகழ்பவர். இந்த நிலையில் வருகிற 25 ஆம் தேதி இவர் நடித்த “லைகர்” திரைப்படம் வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
