CINEMA
விஜய் தேவரகொண்டாவை தனியாக அழைத்து சென்ற ரன்வீர் சிங்.. படக்குழுவினர் அதிர்ச்சி… என்ன விஷயமா இருக்கும்?
ரன்வீர் சிங், விஜய் தேவரகொண்டாவை மேடைக்கு பின்புறம் தனியாக அழைத்துச் சென்று என்ன பண்ணார் தெரியுமா?
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள “லைகர்” திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளிவர உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ள்ளனர்.
பூரி ஜெகன்னாத் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்னாத், அபூர்வா மேத்தா, ஹிரு யாஷ் ஜோகர் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். “லைகர்” திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.
இந்நிலையில் “லைகர்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் நேற்று வெளியானது. இதனிடையே நேற்று மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், கரண் ஜோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென ரன்வீர் சிங் விஜய் தேவரகொண்டாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேடையின் பின் பக்கம் மறைவாக அழைத்துக் கொண்டு போனார். அவர்களை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். இருவரும் மறைவாக சென்று என்ன செய்தார்கள் என அங்கிருந்தவர்களுக்கு பிடிபடவில்லை.
சற்று நேரத்தில் இருவரும் வெளியே வந்தனர். அப்போது தான் தெரிந்தது இருவரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டனர் என்று. அதாவது ரன்வீர் சிங்கின் உடையை விஜய் தேவரகொண்டா போட்டுக் கொண்டார். விஜய் தேவரகொண்டா உடையை ரன்வீர் சிங் போட்டுக் கொண்டார்.
விஜய் தேவரகொண்டா சாதாரண உடையில் வந்ததால் ரன்வீர் இப்படி செய்தார் என கூறப்படுகிறது. இந்த வீடியோவை “Celluloid Panda” என்ற இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ இதோ…
View this post on Instagram