CINEMA
விஜய் தேவரகொண்டாவுக்கு இவ்வளவு பெரிய கட் அவுட்டா??
விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப் பிரம்மாண்டமாக வைக்கப்பட்ட கட் அவுட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா தெலுங்கில் “பெல்லி சொப்புலு” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும் “அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பரவலாக அறியப்பட்டார்.
அதன் பின் தமிழில் நேரடியாக “நோட்டா” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் தெலுங்கில் செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர். இன்றைய இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்பவர்.
இந்நிலையில் சமீபத்தில் மைக் டைசனும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து “லைகர்” என்ற திரைப்படத்தில் நடித்து வந்தனர். இதில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளிவர உள்ளது. இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் சுதர்சன் என்ற திரையரங்கின் முன் விஜய் தேவரக்கொண்டாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது 75 அடி என கூறப்படுகிறது. இதில் விஜய் தேவரகொண்டா “லைகர்” திரைப்படத்தின் பாக்ஸர் கெட் அப்பில் தேசிய கொடியை ஏந்தியவாறு தென்படுகிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“லைகர்” திரைப்படம் பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுகப்பட்ட திரைப்படம் ஆகும். இதில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார். மேலும் உலகப் புகழ் பெற்ற பாக்ஸிங் சேம்பியனான மைக் டைசனும் நடித்துள்ளார். இவர்களுடன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
“லைகர்” திரைப்படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்னாத், அபூர்வா மேத்தா, ஹிரு யாஷ் ஜோகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
“லைகர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.